About our school
VISSION
Towards turning a competency based society with integrated personality through quality education to our country.
தூர நோக்கு
தரமான கல்வியின் மூலம் ஒன்றினைந்த ஆளுமை கொண்ட தேர்ச்சி மிக்க சமுதாயத்தை நம் நாட்டிற்கு உருவாக்குதல்.
MISSION
To implement the general education with modern technologies, we produce knowledge, competency and quality based students society with integraded personalities to our country.
பணிக்கூற்று
நவீன தொழில்நுட்ப அறிவுடனான பொதுக் கல்வியை அமுலாக்குவதன் மூலம் அறிவார்ந்த தேர்ச்சி மிக்க தரமான ஒன்றினைந்த பூரண ஆளுமையுடைய மாணவர் சமுதாயத்தை நம் நாட்டிற்கு உருவாக்குதல்.
பாடசாலைக் கீதம்
அறிவுயர் கலைகளில் பெரிய பண்டிவிரிச்சன்
பதிதனில் தரும் கலைக் கூடம்
நிறை ஒளி நிறைந்து நாம்
மகிழ்வுடன் வாழ நிமலனை நிதம்
பணிவோமே - குறைகளை நீக்கி
கவலைகள் அகல கருத்துடன்
கருமங்கள் புரிவோம்
கலையகம் போற்றுவோம் - வாரீர்
கலைப்பணி புரிந்திட வாரீர்
ஆங்கில ஞானமும் அருந்தமிழ் விந்தையும்
அரியகைப் பணிகளும் இங்கே
ஓங்கு மெய் ஞானமும்
உயர் கவின் கலைகளும்
கணிதமும் வளர்ந்திடும் இங்கே
கலையகம் போற்றுவோம் - வாரீர்
கலையகம் போற்றுவோம் - வாரீர்
கலைப்பணி புரிந்திட வாரீர்
தன்மானத் தமிழராய் வளர்வோம்
என்றும் தரணியில் தழைத்து நாம் - உயர்வோம்
சாதி மதவெறிகள் பேதங்கள் அகன்றிட
சகலரும் இணைந்தொன்றாய் மகிழ்வோம்
உயர்ந்த சிந்தனைகளும் உளமதில் உதித்திட
உணர்வுடன் செயல் பல புரிவோம்
ஜெயமே ஜெயமே
ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயமே