பாடசாலையின் வரலாறு
ஸ்தாபித்த ஆண்டு        -        1957ம் ஆண்டு
பெயர்                                 -        மன்/ பெரியபண்டிவிரிச்சான் ம.வி
ஸ்தாபகர்                          -        அருட்திரு. முயோ அடிகளார்
ஸ்தாபிப்பின் நோக்கம்
மடு தேவாலயத்தின் கீழ் குடியேற்றப்பட்ட கிராம மக்களின் சமய விழுமியங்களையும், பண்பாடு, கலாச்சாரத்தையும் பேணும் அறிவு, திறன் மனப்பாங்குகளை கல்விக்கூடாக விருத்தி செய்து மேம்படுத்துதல்.

வளர்ச்சி
1957ம் ஆண்டிற்கு முன்னர் மடுவில் மாதா கோயிலுக்கு தொண்டுப் பனியாற்றிய மக்களிற்கான கிறிஸ்தவப் பாடசாலை மிசனரிமார்களால் ஆரம்பிக்கப்பட்டு நடாத்தப்பட்டு வந்தது. இவ்வேளை கிறிஸ்தவ பாடசாலைகள் அரச பாடசாலையாக உள்ளீர்க்கப்பட்டபோது இப்பாடசாலையும் அரச பாடசாலையாக மற்றப்பட்டு மன்/ பெரியபண்டிவிரிச்சான் அ.த.க.பாடசாலை எனும் பெயருடன் ஆலயத்துக்கு முன்பாக ஒரு ஓலைக் கொட்டகைக்குள்ளே உதயம் பெற்றது. இயற்கை எழில் கொண்ட இப் பதியில் ஒரு தலைமை ஆசிரியரும் 23 மாணவர்களுமே கற்றல் கற்பித்தல் நடவடிக்கைக்காக பாடசாலை சமூகமாக ஒன்று கூடினர். இப் பாடசாலையானது ஆரம்பத்தில் அடிப்படை வசதிகள் எதுவுமில்லாது அமைந்திருந்தாலும் அடுத்து பத்து வருடங்களில் துரித வளர்ச்சி கண்டது. அதாவது 250 பிள்ளைகளும் எட்டு ஆசிரியர்களுமாக இப் பாடசாலைச் சமூகம் விரிவடைந்து பௌதீக வளங்களையும் அடிப்படை வசதிகளையும் கொண்ட தரம் ஒன்று தொடக்கம் தரம் பதினொன்று வரையிலான மாணவர்களையும் கொண்டதான தொடர் வளர்ச்சிப் பாதையில் முன்னேறியது. 

தற்போது இருக்கும் பிரதான மண்டபமானது 1963 இல் அமைக்கப்பட் டது. இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் போன்ற தூர இடங்களில் இருந்து வரும் ஆசிரியர் நலன்கருதி இரண்டு ஆசிரியர் 
விடுதியும் அமைக்கப்பட்டது. 

மேலும் 1992ம் ஆண்டு இப்பாடசாலையானது கொத்தணிப் பாடசாலைகளின் தாய்ப்பாடசாலையாக இயங்கியமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இப்பாடசாலையின் அதிபரே கொத்தணி அதிபராக இருந்து மன் /சின்னப்பண்டிவிரிச்சான், மன்/ தட்சணாமருதமடு, மன்/கீரிசுட் டான்,மன்/முள்ளிக்குளம், மன்/சின்னவலயங்கட்டு, மன்/இரணைஇலுப்பைக்குளம், மன்/ விளாத்திக்குளம், மன்/ கட்டையடம்பன் , மன்/ குஞ்சுக்குளம், மன்/ பெரியமுறிப்பு,மன்/ பாலம்பிட்டி ஆகிய பாடசாலைகளின் மனித வளங்களையும் பௌதீக வளங்களையும் முகாமை செய்துள்ளார். அத்துடன் மன்/ பெரியபண்டிவிரிச்சான் கொத்தணிப் பாடசாலையில் கிடைத்த ஆசிரியர் வளம், பௌதீக வளம், விளையாட்டு உபகரணங்கள் என்பன ஏனைய பாடசாலைகளுக்கும் வழங்கப்பட்டு வளப்பகிர்வின் முக்கிய இடமாக இப் பாடசாலை இயங்கியுள்ளதுடன் சிறுவர் அரங்கு கொத்தணி மட்ட விளையாட்டுப் போட்டி ஏனைய தமிழ், சமய, சித்திர பாடம் , ஓவிய கண்காட்சி என்பனவும் இப் பாடசாலையிலே  தொடர்ந்து இடம்பெற்றுள்ளது. மேலும் வளர்ச்சியின் படிக்கல்லாக 1995ம் ஆண்டு பாடசாலையில் க.பொ.த. உயர்தரக் கலைப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. 1995ம் ஆண்டிற்கு முன்னர் வேறு இடங்களில் உயர்தரக் கல்வி  கற்றும் பல்கலைக்கழக அனுமதி என்பது கேள்விக்குறியாக இருந்த போதும் 1998ம் ஆண்டு முதன் முதலாக இப் பாடசாலையில் உயர்தர பரீட்சையில் ஐந்து மாணவர்கள் தோற்றி நான்கு மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றதுடன் 2002ம் ஆண்டு கலை பிரிவில்தற்போது இருக்கும் பிரதான மண்டபமானது 1963 இல் அமைக்கப்பட் டது. இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் போன்ற தூர இடங்களில் இருந்து வரும் ஆசிரியர் நலன்கருதி இரண்டு ஆசிரியர் 
விடுதியும் அமைக்கப்பட்டது. 

மேலும் 1992ம் ஆண்டு இப்பாடசாலையானது கொத்தணிப் பாடசாலைகளின் தாய்ப்பாடசாலையாக இயங்கியமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இப்பாடசாலையின் அதிபரே கொத்தணி அதிபராக இருந்து மன் /சின்னப்பண்டிவிரிச்சான், மன்/ தட்சணாமருதமடு, மன்/கீரிசுட் டான்,மன்/முள்ளிக்குளம், மன்/சின்னவலயங்கட்டு, மன்/இரணைஇலுப்பைக்குளம், மன்/ விளாத்திக்குளம், மன்/ கட்டையடம்பன் , மன்/ குஞ்சுக்குளம், மன்/ பெரியமுறிப்பு,மன்/ பாலம்பிட்டி ஆகிய பாடசாலைகளின் மனித வளங்களையும் பௌதீக வளங்களையும் முகாமை செய்துள்ளார். அத்துடன் மன்/ பெரியபண்டிவிரிச்சான் கொத்தணிப் பாடசாலையில் கிடைத்த ஆசிரியர் வளம், பௌதீக வளம், விளையாட்டு உபகரணங்கள் என்பன ஏனைய பாடசாலைகளுக்கும் வழங்கப்பட்டு வளப்பகிர்வின் முக்கிய இடமாக இப் பாடசாலை இயங்கியுள்ளதுடன் சிறுவர் அரங்கு கொத்தணி மட்ட விளையாட்டுப் போட்டி ஏனைய தமிழ், சமய, சித்திர பாடம் , ஓவிய கண்காட்சி என்பனவும் இப் பாடசாலையிலே  தொடர்ந்து இடம்பெற்றுள்ளது. மேலும் வளர்ச்சியின் படிக்கல்லாக 1995ம் ஆண்டு பாடசாலையில் க.பொ.த. உயர்தரக் கலைப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. 1995ம் ஆண்டிற்கு முன்னர் வேறு இடங்களில் உயர்தரக் கல்வி  கற்றும் பல்கலைக்கழக அனுமதி என்பது கேள்விக்குறியாக இருந்த போதும் 1998ம் ஆண்டு முதன் முதலாக இப் பாடசாலையில் உயர்தர பரீட்சையில் ஐந்து மாணவர்கள் தோற்றி நான்கு மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றதுடன் 2002ம் ஆண்டு கலை பிரிவில் மாவட்ட  நிலையில் 2ம் இடம்  பெற்றதோடு 2003ம் ஆண்டு உயர்தர வர்த்தகப் பிரிவு மாணவர்களில் மாவட்ட நிலையில் 2ம் , 3ம் இடங்களில் இரு மாணவர்கள்  சித்தியடைந்து இப் பாடசாலைக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளனர். 

இத்துடன் 2003ம் ஆண்டு ஆங்கில அறிவையும், தொழில்நுட்ப அறிவினையும் மேம்படுத்தும் முகமாக ஒலி,ஒளி நிழற்றுகைக்கான கட்டிடம் பாடசாலையினுள் அமைக்கப்பட்டது. இக்காலப் பகுதியில் தான் மேல்மாடிக் கட்டிடத்துக்கான அடிக்கல் 21.05.2003 அன்று நாட்டப்பட்டது. 

மேலும் 12.06.2005ம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவிய கண்காட்சி பெரும் நிலப்பரப்பு முழுவதையும் உள்ளடக்கி எமது பாடசாலையில் நடாத்தப்பட்டது. அவ்வேளையில் இப் பாடசாலையில் பணி  புரிந்த அதிபர், ஆசிரியர், மாணவர்களிற்கு பாராட்டு பரிசில் வழங்கி எமது பாடசாலையையே கெளரவித்தனர்.

இத்துடன் எமது பாடசாலைக்கு நீண்ட நாள்  தேவையாக இருந்த  விஞ்ஞான ஆய்வு கூடம்  24.08.2005 வழங்கப்பட்டது. இதன் பின்னர் 2006ம் ஆண்டு முறை சாரா கல்விக்கூடாக  கணினி பயிற்சி  வழங்கும் திட்டம் எமது பாடசாலைக்கூடாக இடம் பெற்றது. இத் திட்டத்தின் கீழ் மாணவர்கள் பெரும் பயனடைந்தனர். 

மேலும் இப் பாடசாலையின் பிரதான  மேல்மாடிக் கட்டிடம் 24.11.2006ம் அன்று எமது பங்குத்தந்தை அருட்திரு செபஸ்ரியன் குரூஸ் என்பவரால் திறந்து வைக்கப்பட்டது. 

அடுத்து எமது பாடசாலையின் இருண்ட பாகமாக 2007ம் ஆண்டினை கொள்ளலாம். 2007ம் ஆண்டு மாசி மாதம் பெரியபண்டிவிரிச்சான் கிராமம் முழுவதும் செல்வீச்சுக்கு இலக்காகியமையினால் இப் பகுதி மக்கள் இடம் பெயர்ந்து மடு நோக்கிச் சென்றமையினால் இப் பாடசாலையும் இடம் பெயரலாயிற்று. அருட்சகோதரி அமிர்தராணி சேவியர் 2007ம் ஆண்டு 19ம் திகதியுடன் இடமாற்றம் பெற்றுச்செல்ல அருட்சகோதரி திரேசம்மா சில்வா அவர்கள் பொறுப்பேற்று இடப்பெயர்வின் எல்லா பகுதிகளிலும் அவரின் சேவை நினைவு கூறத்தக்கது. 

இடப்பெயர்வின் தொடக்கம் 14.05.2007 இப் பாடசாலை பெரியமடுவில் தற்காலிகமாக இயங்கத்தொடங்கியது.  பின்னர்  எறிகணைத் தாக்குதல் அதிகரித்தமையினால் அங்கிருந்து இடம்பெயர்ந்து 21.04.2008 அன்று தொடக்கம் கணேசபுரம் பாடசாலையில் தற்காலிகமாக இயங்கியது. மீண்டும் கணேசபுரம் முற்றுகையிடப்பட்ட போது 22.07.2008 அன்று பாடசாலை வன்னேரிக்குளம் பாடசாலையில் இயங்கியது. வன்னேரிக்குளம் முற்றுகைக்குள்ளாகவே பாடசாலை ஆவணங்களையும் ஏற்றிக்கொண்டு அருட்சகோதரி அவர்கள் 10.08.2008 கிளி/கனகபுரத்தில் இப் பாடசாலையை நடத்திக் கொண்டிருந்த வேளையில் கடுமையான வான் தாக்குதல், செல்தாக்குதல் காரணமாக 03.01.2009 பிரபந்தனாறு நோக்கி எமது பாடசாலை இடம் பெயர்ந்தது. பின்பு அங்கிருந்து 15.01.2009 சுதந்திரபுரத்தில் தற்காலிகமாக இயங்கியது. இவ்வேளை ஓயாத செல் வீச்சுக்களும் பட்டினியும் மனித ஓலங்களும் நிறைந்த அந்த வேளையில் 08.02.2009 அன்று இரணைப்பாலையில் பொருட்கள் ஆவணங்களை ஏற்றிச் சென்று அன்று தொடக்கம் இரணைப்பாலையில் பாடசாலை இயங்கியது. இக்காலத்தில் சண்டை உக்கிரமாக நடைபெற்றது. 14.02.2009 அன்று வலைஞர்மடத்தில் இப் பாடசாலை இயங்கிய போது பேரச்சத்தின் காரணமாக பாடசாலைக்கு மாணவர்கள் சமூகமளிப்பது கிடையாது. 

மேலும் அநேகமான பொது மக்கள் திருகோணமலையை அடைந்த போது பேரிடர் மத்தியிலும் எமது அருட்சகோதரியும் 05.04.2009 திருகோணமலைக்கு கப்பலூடாகப் பயணித்து 08.04.2009 தொடக்கம் கட்டையடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் தற்காலிகமாக இயங்கியது. கோரப்பிட்டிக்குள்  உயிரையும்  உறவுகளையும்  உடமைகளையும்  தமிழ்  சமூகம் தொலைத்து  நிற்க  பாரம்பரிய  பதிவேடுகளையும்  பரீட்சை பெறுபேறுகளையும்   தன்னுயிரோடு  சேர்த்து  ஆவணங்களாக  சுமந்து  எமது  கிராமத்துக்கு  மீண்டும்  கொணர்ந்த  பெருமை  அருட்சகோதரிகளையே  சாரும். மீண்டும்  24.11.2009 எமது  பாடசாலை  கருங்கண்டலில்  தற்காலிகமாக   இயங்கியது. பின்னர் 11.01.2010 இல் மீண்டும்  மன்/கட்டையடம்பனில்  தற்காலிக  இணைப்பு பெற்று  இயங்கியதுடன்  பின்னர் 29.04.2010 மன்/தட்சணா மருதமடுவில் தற்காலிக இணைப்புடன் இயங்கியது.